By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் !
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் !
நெடுந்தீவு

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் !

Last updated: 2024/10/10 at 2:52 PM
Published October 10, 2024 298 Views
Share
4 Min Read
SHARE

ஜனாதிபதிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியவேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.  

குறித்த கடிதத்தில்,

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்ட விடயங்கள் மற்றும்

கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசுசெய்து, அனுமதிபெறப்பட்டுஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார்செய்யப்பட்டிருந்த குறுகிய காலமற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பலஉண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு–

01.     வன ஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகியதிணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக்காணிகளையும் விடுவித்தல்.

02. முப்படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ளஎமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல்.

03.     இந்தியமுதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாகவடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல்.

04.     வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின்உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாகவழங்கல்.

05.     நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித்திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத்தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06.     நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல்.

07.     ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன்இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளைபுனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர்செய்து,உறுதிபடுத்தல்.

08.     ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதைபோக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமானபாலத்துடன் கூடியபாதையை அமைத்தல்.

09.     அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமானபாலத்துடன் கூடியபாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தைபுனரமைத்தல்.

10.     இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல்.

11.     பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில்முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12.     வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல்.

13.     பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும்விரைவுபடுத்தல்.

14.     சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள்மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15.     உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளைகட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல்.

16.     உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல்.

17.     இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின்செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல்.

18.     யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார்மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில்துறைமுகங்களைஅமைத்தல்.

19.     வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும்மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20.     முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப்பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின்உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதிகடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாகமக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்.

21.     முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதானபோக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள்அற்றவகையில் சீரமைத்தல்.

22.  கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாகவழங்குதல்.

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல்.

24.     புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின்முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ்உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல்தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25.     வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தைசெயற்படுத்தல்.

26.     வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களைவலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில்குறைத்தல்.

27.     வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்டநிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும்மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கைஎடுத்தல்

28.     அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித்தொகையினை அதிகரித்தல்.

29.     காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30.     பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கானநியாயமான  இழப்பீடுகளை வழங்கல்

31.     சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல்

32.     கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33.     அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக(மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR October 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு !
Next Article நெடுந்தீவு சுப்பிரமணியவித்தியாலய மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்திற்கு தெரி்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?