தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயகபோராளிகள் கட்சியினருக்குமான சந்திப்பு நேற்று (15 பெப்ரவரி) காலை 10.00 மணியளவில் யாழ்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன் அவர்களும் ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு எல்லைதாண்டி மீன்பிடி தமிழர் நில கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென எம்மால் கோரப்பட்டது.
வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இலங்கையி்ல்பு ரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
க.துளசி ஊடகபிரிவு ஜனநாகயபோராளிகள்