சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்-நூல்வெளியீட்டுவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜாட்ணம் எழுதிய ‘சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்’ எனும் நூல்வெளியீட்டுவிழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெ றவுள்ளது.

முன்னாள் இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும்,முன்னாள் அரசாங்க அதிபருமாகிய உடுவை. எஸ்.தில்லை நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் நல்லை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையினை வழங்கவுள்ளார்.

கெளரவ விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜா, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு-திருமுருகள், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகி யோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article