சைபர் குற்றங்களுடன் வெளிநாட்டவர்கள் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (13/08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அந்த வெளிநாட்டவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment