இலங்கையின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள செவனகல பிரதேசத்தில் உள்ள கினிகல்பலஸ்ஸ கிராமத்தில் காணப்படும் பாறைகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை ஒத்தனவாக காணப்படுகின்றது என்று புவியியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், பாறைகளை ஆராய்வதற்காக நாசா குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள சர்ப்பன்டைன் என்ற ஒரு வகைப் பாறை, செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்பாறைகளை ஒத்தவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜை சுனிதி கருணாதிலக தலைமையில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள் ஆய்வுகளுக்காக நாசா கொண்டு செல்லப்படவுள்ளன.