கண்டி – போகம்பறை சிறைச்சாலைக் கைதிகள் பலர் 5 பஸ்களில் நேற்று காலை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் அழைத்து வரப்பட்ட அனைவரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகளுக்குச் சொந்தமான பஸ்களில் இவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.