செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை நேற்று வியாழக்கிழமை (12/03) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட அகழ்வு பணிகளில் ஈடுபடும் தரப்பினர் நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன்போது அகழ்வு பகுதியில் நீரினுடைய அளவு மேற்பார்வையயிடப்பட்டு குறித்த நீரை அகற்றுகின்ற நடவடிக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்ததுடன் அகழ்வு பணிக்கான தற்போதைய திகதியாக ஏப்ரல் 20 என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கின் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Share this Article