செம்மணி புதைகுழியில் எடுத்த தடயப் பொருட்களை அடையாளம் காட்ட உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து எலும்புகூடுகளுடன் இருந்துகண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டுவதற்காகவைக்கப்பட உள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில்   எதிர்வரும் ஓகஸ்ட்05 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை  அவற்றைப்பார்வையிட முடியும்.

அதில் உள்ள பொருட்களை அடையாளம் காணும் பட்சத்தில் நீதிமன்றுக்குஅல்லது குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்புவழங்க முடியும்.

இதேவேளை சித்துப்பாத்தி மாயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட  தடய பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article