இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினரால் வெள்ள அனர்த்த நிவராண நடவடிக்கையாக பிரதான வீதி துப்பரவு பணி இன்றைய தினம் (பெப்ரவாி 19) இடம் பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவின் கிளையின் தலைவா் திரு.எட்வேட் அருந்தவசீலன் அவா்களது தலமையில் .இடம் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து பிரதேச வைத்தியசாலை வைரையான பிரதான வீதி துப்பரவு செய்யும் பணி சிறப்பாக இடம் பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ.சி.சத்தியசோதி அவா்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் செஞ்சிலுவை அங்கத்தவா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளை பல்வேறு பணிகளை பல வேளைகளிலும் நெடுந்தீவில் சிறப்புடன் சேவையாற்றி வருவதுடன், புரவிப் புயலின் பாதிப்பின் பின்னா் குறிப்பிட்ட சில செயற்றிட்டங்கள் உலக செஞ்சிலுவை சங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இத் துப்பரவுப்பணியானது தொடாச்சியாக நாளைய தினமும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.