அரச வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் காலநிலையினால் ஆஸ்துமா, சுவாச அமைப்பு தொடர்பான நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.