சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை இன்று கணிசமாக காணப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவிற்கான உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளில் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் அதிகளவானவர்கள் வருகை தந்தனர்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை பல நாட்களாக தடைப்பட்டிருந்ததுடன் அண்மைய நாட்களில் மிக குறைவானவர்களே வருகை தந்தனர்

இன்று மிக நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் 70இற்கும் மேற்பட்ட உள்ளுர் சுற்றுலாப்பிரயாணிகள் வருகை தந்ததனை அவதானிக்க முடிந்தது.

சுற்றுலாப்பிரயாணிகள் வருகை குறைவடைந்தமையால் அவர்களை நம்பி வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தவர்களுக்கு கடந்த நாட்களில் வாழ்வாதார செயற்பாடுகள் மந்த நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


ஆயினும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மக்கள் மனங்களில் காணப்படும் அச்ச நிலை மேலும் நீடிப்பதால் தென்னிலங்கையில் இருந்து தீவகத்திற்கு வரும் மக்களால் கொரோனா தாக்க நிலை வந்திடுமோ என்கின்ற அச்சநிலை குறித்து சில மக்கள் கருத்து வெளியிட்டனர்.

Share this Article