எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளது.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிலைய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், பயண முகவர்களுக்கும் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விமான நிலையத்தில் கிருமி நீக்கம், சுங்க மற்றும் குடிவரவு நடவடிக்கைகள், அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் மற்றும் சுற்றுப்பயணத்திற்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக உபுல் தர்மதாச தெரிவித்தார்.