சுதுமலையில் முன்னெடுக்கப்பட்ட கால்வாய் துப்புரவாக்கல் பணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் சுதுமலை கால்வாய் துப்புரவாக்கல் வேலைத்திட்டம் சிரமதான அடிப்படையில் நேற்று (ஓகஸ்ட் 29) இடம்பெற்றது.

வறட்சித் தணிப்புக்காக அவசரமாக சிரமதான வேலைகளை சகல பிரதேச செயலக பிரிவில் நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 28) முதல் ஆரம்பித்து எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல பிரிவுகளும் நிறைவேற்றவேண்டும் என்ற அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கால்வாய் சுதுமலை குளத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் மழைக்காலத்தில் கூடுதல் நீரை குளத்தில் சேகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

Share this Article