சீரற்ற காலநிலையால் 2087 குடும்பங்கள் பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article