சிறைச்சாலை உயர் அதிகாரிகள் அனைவரதும் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம்மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிபல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டபுகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும்முழுமையான விசாரணை நடத்தப்படவுள்ளது.
அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவருமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமானசொத்துக்களைக் கொண்டிருந்தால், அவர்கள் அவற்றை எவ்வாறு பெற்றார்கள்என்பதை நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று இலஞ்ச ஒழிப்புஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.