உலகம் சிறுவர்களுக்கானது, அவர்களின் உலகத்தை நம்மால் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஏழ்மை, போசாக்குக் குறைவு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் சமநிலை அற்ற நிலை, சமூக வாய்ப்புகளில் குறைவு, போதைப் பொருள் பாதிப்பு, தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டின் விளைவுகள் ஆகியவை இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும், சிறுவர்களின் உளவியல் மற்றும் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூகப்பலன்கள், மன அழுத்தம் மிக்க தேர்வு முறைமைகளை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற சவால்களில் இருந்து, இந்நாள் தலைமுறைச் சிறுவர்களை விடுவித்து, அவர்களுக்கே உரிய சிறுவர் உலகை மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது நமது மறுமலர்ச்சி முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்காலத்தை வெல்வதற்கான சுதந்திர கற்பனை, கனிவு மற்றும் உயர்ந்த மனிதர்களை உருவாக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதற்குத் தேவையான பொருளாதார சுதந்திரம், மனிதநேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கவும், தேவையான அரசியல் மாற்றங்களை முன்னுரிமையாகக் கொண்டு செயற்படுவோம்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதியாகச் செயல்பட வேண்டியது அவசியம்.