சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்யக் கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று (ஒக்ரோபர் 11)புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.

துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டார்.

Share this Article