வரலாற்றுசிறப்புமிக்க வேலணை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்ததிருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின்ஒழுங்குபடுத்தலில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்றது.
செப். 18 – வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்ஆரம்பமாகி செப். 26 வெள்ளிக்கிழமை மாலை நற்கருணைவிழா திருப்பலி யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

சனிக்கிழமை (செப்.27) காலை திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்டஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்க்ள் தலைமைதாங்கிஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும்ஆசீர்வாதமும் இடம்பெற்றன.