நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க. வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்றையதினம் (ஒக். 08) வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பெற்றோர் , மாணவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார் கலந்து சிறப்பித்தார். ஆசிரியர்கள் மாணவர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மங்கள ஒளியேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களது சிறப்பு நிகழ்வுகள் , பெற்றோரின் நிகழ்வுகள் என சிறப்பாக இடம்பெற்றதுடன், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வின்போது வித்தியாலய ஆசிரியரகள் , மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.