2024 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தமது பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலமாகப் பார்வையிடலாம்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்று (ஒக். 09) நள்ளிரவுடன் முடிவடைவதாகவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.