சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுமுன் தினம்(டிசம்பர் 20) இரத்தவங்கி திறந்து வைக்கப்பட்டு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இதனூடாக சாவாச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம்இயங்கக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சைகளும் மகப்பேறுசத்திர சிகிச்சைகளையும் மேற்கொள்ளமுடியும் மேலும் பல் வேறு நோய்க்காரணிகளால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கும் இரத்த வங்கி செயல்படுவதன் ஊடாக அங்கு சிகிச்சை பெறக்கூடிய சூழல்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.இவ் இரத்த வங்கியினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு பளை பிரதேசவைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமை ஆற்றிக்கொண்டிருக்கும் வைத்திய அதிகாரியான மகேசு பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.