யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் மக்கள்சேவை நிகழ்வு இன்று (நவம்.04) சாவகச்சேரி பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடாத்திய நடமாடும் சேவையில் 2041 பொதுமக்கள் வருகை தந்து, 20 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நடமாடும் சேவையில் கண் பரிசோதனையினை 843 பேரும்,
ஆட்பதிவுச் சேவையினை 575 பேரும், மருத்துவ பரிசோதனைச் சேவையினை 279 பேரும்,
பிறப்பு இறப்பு பதிவுச் சேவையினை 472 பேரும்,
மத்திய மோட்டார் வாகன போக்குவரத்து சேவையினை 153 பேரும்,
மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையினை 77 பேரும்,
ஓய்வூதிய சேவையினை 26 பேரும்,
காணி தொடர்பான சேவைகளினை 122 பேரும்,
பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 111 பேரும்
முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 06 பேரும்
சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 17 பேரும்
கிராம சேவையாளர்களால் வழங்கப்படும் சேவைகளினை 520 பேரும்
உள்ளடங்கலாக 2041 பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.