சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா – 2025 நாளையதினம் (செப். 18) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

வழிபாடுகள் தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பலி இடம்பெறவுள்ளது.

செப். 26 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நற்கருணைவிழாவும்மறுநாள் செப். 27சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர்பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் ஆலய பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருவிழா மற்றும் நற்கருணைவிழாவிற்கு வருகைதரும்பக்கதர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் யாழ்ப்பாண மத்திய பேருந்துநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிபாலகர் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.

Share this Article