அரச இலக்கிய விருது வழங்கும் விழா – 2025 இல் பேராசிரியர் நாகமுத்துபிரதீபராஜா அவர்களின் “பிராந்திய காலநிலையியல்” என்னும் நூலுக்காக ‘ சிறந்த புலமைத்துவ ஆய்வு நூல்‘ என்ற வகைப்பாட்டில் முதலாம் இடம் பெற்று சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் (செப். 18) அலரி மாளிகையில் நிகழ்ந்த விருது வழங்கும் விழாவிலேயே இக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வடக்கு மாகாணத்தின் காலநிலையியல் தொடர்பான பலவிடயங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கு மக்களின் காலநிலையியல்தொடர்பான பாரம்பரிய அறிவு, வானிலைக் கணிப்பீடுகள், சமய நம்பிக்கைகள், பண்டிகைகள், விழாக்கள், மற்றும் பஞ்சாங்கம் கூறும் வானிலை தொடர்பான பலவிடயங்களுக்கு பின்னான அறிவியல் உண்மைகள், வடக்கு மாகாணத்தின்வானிலை விஞ்ஞான வரலாறு, வடக்கின் மழைவீழ்ச்சி, வெப்பநிலை, ஆவியாக்கம், ஈரப்பதன், அமுக்கம், வரட்சி, வெள்ளம், இடி மின்னல், சூறாவளிபோன்றவற்றின் வரலாறு மற்றும் அறிவியல், வடக்கு மாகாணத்தின் எதிர்காலகாலநிலையியல் எதிர்வு கூறல்கள், வடக்கின் நீர்வளம் மற்றும் காலநிலைமாற்றம், போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய முழுமையான நூலாகவண்ணப் படங்களோடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , புத்தசாசன, சமய மற்றும் கலாச்சாரஅலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி , பிரதியமைச்சர்கமகெதர திசாநாயக்க உட்பட்ட அமைச்சின் உயரதிகாரிகள், ஏனைய விருதுபெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் பெற்றவர்கள் உட்பட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.