சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் டிசம்பர் 21க்கு முன்னர் விசாரணை அறிக்கை வெளியீடு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை விரைவில் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பாராளுமன்ற குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக வௌியான தகவல் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அறிக்கை காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் தெரிவித்தார்.

அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அத்துடன் அதன் தீர்மானத்தை அறிவிப்பதற்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை.

எனவே பாராளுமன்ற அனுமதியுடன் அந்த குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்கமைய அந்த குழுவின் காலம் எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளது,அதற்கு முன்னர் குழுவின் அறிக்கையை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்

Share this Article
Leave a comment