சம்பியன் வென்றது இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டு கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் சக்தி தொலைக்காட்சி,சக்தி F.M அனுசரணையில் 60 அணிகள் பங்கு கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 6) மாலை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இளவாலை யங்கென்றீசியன் கழகத்தை எதிர்த்து குருநகர் பாடுமீன் கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களும் பெறப்படாத நிலையில் தண்ட உதை வழங்கப்ட்டது.

அதன் முடிவில் 4-3 எனும் கோல் கணக்கில் இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

Share this Article