யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள்திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையேஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ..
மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்தகாலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடியமருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரியவகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர்செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும்.
அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரைநோக்கி வரும் எதுவும் ஒரு “மருத்துவரின் மேன்மை” என்பதற்கான சான்றாகஇருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்துபலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது.
“ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர்நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில்ஒருவராகவே இருந்தார்.”