சதொச விற்பனை நிலையத்தில் குறைந்த விலையில் முட்டை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்டத்தில் இன்று(ஓகஸ்ட் 4) முதல் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டை விநியோகிக்கப்பட்டதனால், சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையில் இன்று முட்டைகளை வாங்குவதை காணக் கூடியதாக உள்ளது.

இதுவரை காலமும் 65 ரூபாய் 75 ரூபாய் முட்டை வாங்கிய மக்கள், சதோச விற்பனை நிலையம் ஊடாக, குறைந்த விலையில் முட்டைகளை பெற்றுச் செல்வதை காணக் கூடியதாகவுள்ளது.

Share this Article