சண்டிலிப்பாயில் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 25 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழில் தேடுவோருக்கு தொழில் ஒன்றைத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் இந்தத் இலவச தொழிற்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தித்துறை, சேவைத்துறை, நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் என்பற்றுக்கான தொழிற்சந்தையாகும்.

தாதியர் பயிற்சி, அழகுக் கலை, தையல், கடல்வளர் சார் பயிற்சிகள் போன்ற பாடநெறிகளுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article