சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு – காணி உரிமையாளர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் காணியொன்றிற்குள் நேற்று (23/11) நுழைய முற்பட்டபோதே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில்சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article
Leave a comment