சட்டவிரோத பீடி இலைகள் நுரைச்சோலையில் பறிமுதல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

நுரைச்சோலையின் பனையடி பகுதியில் நேற்று (13/08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பீடி இலைகளை ஏற்றிவந்த லொறியொன்றும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த, ஆயிரத்து 1464 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதியும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன

Share this Article
Leave a comment