சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக  வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய உப பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13/08) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்திய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலைய உப பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article
Leave a comment