கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தினூடாக கனரக வாகனப் போக்குவரத்து இன்றுமதியம் முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தில் அவசர திருத்தவேலைகள் நடைபெறவுள்ளதால் பாலத்தினூடாக கனரக வாகனங்களின்போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைஅறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்தில்பயணிக்கும் பயணிகள் சில இடங்களில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து செல்லவேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
மேலும் கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால்மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள்விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர்பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.