வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தில் ஊழியர்நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (டிசம்பர்16) இரத்ததானமுகாம் இடம்பெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இரத்ததான முகாமில் ஊழியர்கள் உட்படபொதுமக்களும்,நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ் .சிவகுமார் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் கலந்துகொண்டு இரத்ததானத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.