யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் தலைமையில் இடம்பெற்ற கோவிட் – 19 சம்மந்தமான இணையவழி கலந்துரையாடல்
*முடக்கப்பட்ட இடங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கும் உணவு உற்பத்தி பொருட்கள், மரக்கறிகளை வழங்கப்படவேண்டும்.
*தடுப்பூசி நிலையங்களை அதிகரிக்குமாறு பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
*5000ரூபாய் கொடுப்பனவு வரும் 02ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.
*தடுப்பூசி போடும் மையங்களை கிராமசேவகர் பகுதிகளுக்கு அருகில் செயற்படுத்தவும்.
*கிராமியகுழுவின் மூலம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
*கோவிட் – 19 காலகட்டத்தில் செயற்படும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கையுறை,முகக்கவசம் தடையில்லாமல் வழங்குங்கள்.
*சொந்த இடங்களுக்கு செல்வதற்காக தற்போது உள்ள இடத்தின் கிராமசேவகர்களை உறுதிப்படுத்தி அவர்களை சொந்த இடத்துக்கு செல்வதற்கான வழிசமையுங்கள்.
*அத்தியாவசிய பொருட்களுக்கான வியாபரிகளுக்கு “பாஸ் அனுமதி” வழங்குங்கள்.
*கீரிமலை அந்தியேட்டி மடத்திற்கான அனுமதியை இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்துங்கள். (மரணித்தவரின் உறவினரில் இருவர்கள் மாத்திரம் அனுமதிக்கவும்)
*பழப்பொருட்களை நடமாடும் விற்பனை மூலம் விநோயிக்க அனுமதி வழங்கவும்.
*கோவிட் – 19 தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்தும் சந்தர்பத்தில் அடுத்த ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை பெறமுடியும்.