சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலதுபக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதியவிபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல–கிரியுல்ல வீதியில் நேற்று(ஜூலை19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்துதம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.