கோப்பாய் விபத்தில் நீர்வேலி இளைஞர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், கோப்பாயில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி தெற்கைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் பாவிதன் (வயது-23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

கடந்த 23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்தபோது, கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகில் இவர் விபத்துக்குள்ளானார்.

முன்னே பயணித்த கார் ஒன்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், இவர் காரின் பின்புறத்துடன் மோதி விபத்துக்குள்ளாகித் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார்.

இளைஞன் கோப்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிவ் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

விபத்துடன் தொடர்புடைய கார்ச் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share this Article