கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கேள்வர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம் இன்று (மே 13) கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அமரர் மகிந்தன் ஞாபகார்த்தமாக இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இதில் 60 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னதப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சிவகோணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Share this Article