கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) இன்று (ஜூன் 16) காலை 7.10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரன் கலந்து கொண்டார்.

இதேவேளை கலாசாலை உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி திருமதி ஸ்ரீ சக்தி ரம்யராகுலன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட நூற்றாண்டு நிகழ்வு சின்னம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

கலாசாலையின் முன்னாள் அதிபர்களான திரு வே.கா. கணபதிப்பிள்ளை, திரு வீ. கருணலிங்கம், யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர் திரு முத்து இராதாகிருஷ்ணன், யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article