கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்துள்ளது.
இங்கு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
நாளைய தினம் (31) இதே கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவினருக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறும்
மூன்றாம் நாள் கோப்பாய் வடக்கு (J/262) பிரிவுக்கான தடுப்பூசி கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படும்.
ஐந்தாம் நாள் அச்சுவேலி வடக்கு (J/285) தடுப்பூசி ஏற்றும் இடம் பணிம் இடம்பெறும் இவர்களுக்கான தடுப்பூசி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படும்.
ஏழாம் நாள் அச்சுவேலி மேற்கு (J/287) தடுப்பூசி ஏற்றும் பணம் இடம்பெறும் இவர்களுக்கான தடுப்பூசியும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஏற்றப்படவுள்ளது.