கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை திங்கட்கிழமை (ஒக் 28) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை வழக்கமான நிலைக்கு திரும்பிய நிலையில், குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்ததனை அடுத்து, இந்த சேவை மீண்டும் ஆரம்பமாகும். இதன்படி, இன்று (ஒக் 28) காலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி விசேட புகையிரதம் புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை (ஒக் 29) காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் புகையிரதம், மாலை 6.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.