கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான அரியாலையைச் சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவர் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் இன்று (29) சனிக்கிழமை மின் தகனம் செய்யப்பட்டது

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது.

பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொவிட் -19 சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதற்கும் அப்பால் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க தலைவி, அரியாலை சுதேசியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய ஆளுமையை செலுத்திய பெண்மணி ஆவார்.

Share this Article