கொத்து உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பல வகையான கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை இன்று(நவம்பர் 4) நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் நேற்று(நவம்பர் 4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சீனி விலை அதிகரிப்பால் தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வினால், கொத்து மற்றும் பிரைட்ரைசின் விலை 20 ரூபாவினால் அதிக
ரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article