கொட்டடியில் அகழ்வில் 30 T-56 துப்பாக்கிகளும் 5,000 தோட்டாக்களும் மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் இல்லத்தில் மலசலகூட குழி வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதனடிப்படையில், இன்று (ஒகஸ்ட் 22) யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கையின் போது, 30 T-56 துப்பாக்கிகளும் அவற்றுக்கான 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தையொட்டி யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article