கொக்குவிலில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை (செப்ரெம்பர் 24) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையமும், கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையமும் இணைந்து இந்த இரத்ததான முகாமை முன்னெடுக்கவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

Share this Article