கொக்குவில் இந்துக்கல்லூரியில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவாக கல்லூரிக்கு முன்பாக நேற்று(ஒக்ரோபர் 24) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

1987 ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.

இந்நிலையில் 1987 ஒக்டோபர் 24ம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை நோக்கி கவச வாகனங்களிலிருந்து பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article