கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி நேற்று இரவு ( ஏப்ரல் 5)உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெழில்நுட்பப்பிரிவைச் சேர்ந்த (2024) கிசோத்மன் எனும் மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

புதிதாக வாங்கிய மின்னழுத்தியை செயற்படுத்திய பொழுது மின்சாரம் மாணவன் மீது தாக்கியுள்ளது. மாணவனின் உயிரிழப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு விசாரணைகளை திடிர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடல் கூற்று பரிசோதனையின் பின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

Share this Article