கேப்பாபிலவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று(ஜூலை 5) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கேப்பாபிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்தில் இருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டப் பேரணி, கேப்பாபிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை அடைந்தது. அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினர் தங்கள் காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பதால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும், இராணுவத்தினர் தமது காணிகளில் உள்ள வளங்களைச் சுரண்டுகின்றனர் என்றும், நந்திக்கடல் வளத்தை சுரண்டுவதற்காகவே கடற்படையினர் தங்கள் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கு கதறி அழுது தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அங்கு மயங்கி வீழ்ந்ததால் பதற்றமும் ஏற்பட்டது.