“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023” விருது வழங்கல் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 8) சனிக்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
“உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப் போட்டிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 63 குறும்படங்கள் வந்திருந்தன. அவற்றில் சிறந்த 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதன் இயக்குநர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
இயக்குநர் கவிவர்மனின் “யாவரும் கேளீர்” குறும்படம் முதல் இடத்தையும் , இயக்குநர் கெனிஸ்டன் ஜோனின் “30 செக்கன்” குறும்படம் இரண்டாம் இடத்தையும், இயக்குநர் கே.கோடீஸ்வரனின் “வசம்’ குறும்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அவர்களுக்கான விருதுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வழங்கினார். முதல் 3 இடங்களையும் பெற்ற குறும்படங்கள் விருது விழாவில் திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.