வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆசிரியருக்கு இன்றைய தினம் (டிசம்பர் 16) ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாக இடமாற்றம் எனக் குறிப்பிட்டு நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்து ஆசிரியர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
நெடுந்தீவில் ஓர் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் இதனை அறிந்த பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இச் செயற்பாடு பிழையென சுட்டிக்காட்டி அவரை பாடசாலைக்கு ஏற்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தொடர்பு கொண்ட போது நெடுந்தீவில் பிறிதொரு பாடசாலைக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அவருக்கான இடமாற்றம் வழங்கப்படும் எனவும் ஒருவரை திருத்துவதற்காக சந்தாப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ளடுள்ளார் ஆயினும் நெடுந்தீவு குற்றாவளிகளின் சிறைச்சாலை அல்ல உடனடியாக நெடுந்தீவினை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டும் நெடுந்தீவு மக்களது வேண்டுகோளாக இருக்கின்றது.
ஒழுக்காற்று நடவடிக்கைக்காக இடமாற்றங்கள் செய்யப்படுகின்றவர்கள் நெடுந்தீவிற்கு அனுப்பப்புவது குறித்து அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் ஆசிரியர் மாலை 03.00 மணி குமுதினிப் படகில் நெடுந்தீவில் இருந்து திரும்பியுள்ளார்.
நெடுந்தீவு பிரதேசம் பல்வேறு சூழ்நிலைகளில் காரணமாக பின்தங்கிய நிலையில் காணப்படுபவதுடன் பல்வேறு வழிகளில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இக் கிராமங்களினை முன்னனேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டிய அதிகாரிகள் திறம்பட உழைக்கும் நபர்களினை அனைத்து அரசு துறைகளிலம் நியமிக்கின்ற போது தான் பின்தங்கிய பிரதேசங்கள் முன்னேற்றமடையும்.